இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 70,100 ஆக உயர்வு

போர் தொடங்கியது முதல் காசாவில் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.;

Update:2025-11-30 17:30 IST

காசா,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணய கைதிகளை இஸ்ரேல் மீட்டது. அதே சமயம் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,100 ஆக அதிகரித்துள்ளது. போர் தொடங்கியது முதல் இதுவரை 1,70,983 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் 354 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 906 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்