வீட்டின் வாடகையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு; இங்கிலாந்தின் வீடற்றோர் நலத்துறை மந்திரி ராஜினாமா

ருஷானாரா அலி தனது வீட்டின் வாடகையை சுமார் ரூ.80 ஆயிரம் உயர்த்தி வேறொருவருக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.;

Update:2025-08-09 03:50 IST

லண்டன்,

இங்கிலாந்தின் வீடற்றோர் நலத்துறை மந்திரி ருஷானாரா அலிக்கு தலைநகர் லண்டனில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இவர் அங்கு குடியிருந்த குடும்பத்தை காலி செய்து விட்டு தனது வீட்டின் வாடகையை சுமார் ரூ.80 ஆயிரம் உயர்த்தி வேறொருவருக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து ருஷானாரா அலி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொழிலாளர் கட்சி அரசாங்கத்திற்காக பணியாற்றியது எனக்கு கிடைத்த கவுரவம். அரசாங்கத்திற்கு மேலும் எந்த கவனச்சிதறலையும் வழங்கக் கூடாது என்பதற்காக, எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்