சண்டே ஸ்பெஷல்: மணமணக்கும் மீன் குழம்பு செய்வது எப்படி?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் மீன் குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்க்க இருக்கிறோம்.;

Update:2025-12-07 07:21 IST

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் மணமணக்கும் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 12

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2 (பெரியது)

பூண்டு - 10 பல் அளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - 1½ ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

தேங்காய் - ஒரு கப் அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை

ஒரு சிறிய கடாயில் புளியை கரைத்து தனியாக வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வடை சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, தேங்காய் ஆகியவற்றை வதக்கி மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பெரிய வடை சட்டியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பச்சை மிளகாய், வெந்தயம், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் அரைத்த மசாலாவையும், கரைத்த புளி தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். 2 நிமிடங்கள் கழித்து அதனுடன் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு அதனுடன் நன்கு கழுவிவைத்த மீன் துண்டுகளை சேர்த்து வேகவிடவும்.

மீன் துண்டுகள் வெந்த பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். மணமணக்கும் சுவையான மீன் குழம்பு ரெடி.

 

Tags:    

மேலும் செய்திகள்