சண்டே ஸ்பெஷல்: சுவையான அவியல் செய்வது எப்படி..?

பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் அவியல் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.;

Update:2026-01-04 04:44 IST

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 200 கிராம்

வெள்ளரிக்காய் - 1

சீனியவரைக்காய் - 100 கிராம்

முருங்கைக்காய் - 1

கேரட் - 100 கிராம்

வாழைக்காய் - 1

மாங்காய் - 100 கிராம்

சேனைக்கிழங்கு - ¼ கிலோ

தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

தேங்காய் -3 சில் அளவு

பச்சை மிளகாய் - 4

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 2

புளி - கோலி குண்டு அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

 

செய்முறை

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாகியதும் வெட்டி வைத்த காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். சிறிதளவு உப்பையும் சேர்த்து கிளறிவிடவும். அரை கப் தண்ணீர் சேர்த்து வாணலியை மூடி காய்கறிகளை 5 நிமிடம் வேகவிடவும்.

மற்றொரு புறம் துருவிய தேங்காயை மிக்சியில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 4 பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், புளி, கருவேப்பிலை சேர்த்து நறநறவென அறைக்கவும். பேஸ்டாக அரைக்க கூடாது. இதை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் மூடிவைத்து காய்கறி முழுவதும் வேகவிடவும்.

தனியாக சிறிய பாத்திரத்தில் தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அரை டீஸ்பூன் கடுகு, கருவேப்பிலை போடவும். அதை அவியலுடன் சேர்த்து கிளறிவிடவும். சுவையான அவியல் ரெடி.

Tags:    

மேலும் செய்திகள்