2வது டி20 போட்டி: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பிரிஸ்டல்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இங்கிலாந்து போராடும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com