சாம்பியன்ஸ் டிராபி: ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகமான விஷயம்தான் - இந்திய வேகப்பந்து வீச்சாளர்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அமைத்தும் துபாயில் நடைபெறுகின்றன.;
image courtesy:twitter/@BCCI
துபாய்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இதில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளதால் இறுதிப்போட்டியும் துபாயில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்திய அணி அங்கும் இங்கும் அலையாமல் ஒரே இடத்தில் தங்கியிருந்து ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு உள்ளூர் போன்று கூடுதல் சாதகமாக இருக்கிறது என சில முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஒரே மைதானத்தில் விளையாடுவது சாதகமான விஷயம்தான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "நாங்கள் ஒரே மைதானத்தில் ஆடுவது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஏனெனில் இங்குள்ள ஆடுகளத்தன்மை மற்றும் சூழலை நன்கு அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட முடிகிறது. அனைத்து ஆட்டங்களையும் ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகமான விஷயம்தான்" என்று கூறினார்.