டெல்லிக்கு எதிராக சென்னை தோல்வி: ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன..?

டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை தோல்வியடைந்தது.
image courtesy:twitter/@ICC
image courtesy:twitter/@ICC
Published on

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் (17-வது லீக் ஆட்டம்) சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன்களும், மகேந்திரசிங் தோனி 30 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மற்ற இடங்களில் தலா 2 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 4-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்திலும் உள்ளன.

தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 7-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10-வது இடத்திலும் ரன்ரேட் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com