வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து முன்னாள் கேப்டனான ஜோஸ் பட்லர் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி மே 29-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹாரி புரூக் எதிர்கொள்ளும் முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. முன்னாள் கேப்டனான ஜோஸ் பட்லர் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்.

டி20 அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com