மீண்டும் ஐ.பி.எல் வாய்ப்பு கிடைத்தால் இந்த அணிக்காக விளையாடுவேன் - சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா (வயது 38). இவர் இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், இவர் 205 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி 5528 ரன்கள் அடித்துள்ளார். சென்னை அணியில் பல்வேறு சரித்திர வெற்றிகளுக்கு காரணமாக இருந்த அவரை மிஸ்டர் ஐ.பி.எல் என்றும் ரசிகர்கள் அன்பாக அழைப்பார்கள்.

கடந்த 2021-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணி அவரை ஒதுக்கவே மீண்டும் ஐ.பி.எல் தொடரில் வேறு அணியில் விளையாட விருப்பம் இல்லாத அவர் அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்து தனது கரியரை முடித்துக் கொண்டார்.

தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் போட்டிகளின் இடையே சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசிய ரெய்னாவிடம் மீண்டும் ஐ.பி.எல். வாய்ப்பு கிடைத்தால் எந்த அணிக்காக ஆட ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினால் நானும் ரோகித்தும் இணைந்து விளையாடுவோம். அப்படி அவருடன் வான்கடேவில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கும் என்றார். இதன் காரணமாக சி.எஸ்.கே அணிக்கு அடுத்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே விளையாட ஆசைப்படுவது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com