ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
image courtesy: IndianPremierLeague twitter
image courtesy: IndianPremierLeague twitter
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முறையே 28 மற்றும் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் 4 ரன்களில் வெளியேற அடுத்து வந்த கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார்.

அக்சர் படேல் 15 ரன்களிலும், இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com