ஐ.பி.எல்.: டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;
டெல்லி,
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அருன் ஜெட்லீ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.