வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து ஆல் ரவுண்டர் விலகல்

இவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.;

Update:2025-05-31 21:15 IST

image courtesy:ICC

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளையும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 3-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டான் விலகியுள்ளார். முதல் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், வலது சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்