டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லாகூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பர்ஹான் 74 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேசம் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 144 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சகிப் 50 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com