டி20 கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 49 ரன் எடுத்தார்.
image courtesy: @windiescricket
image courtesy: @windiescricket
Published on

பிரிஸ்டல்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் களம் புகுந்தனர். இதில் லூயிஸ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ஷாய் ஹோப் களம் புகுந்தார்.

ஹோப் - சார்லஸ் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் சார்லஸ் 47 ரன்னிலும், ஹோப் 49 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களம் புகுந்த ரூதர்போர்டு 6 ரன், பவல் 34 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 49 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com