முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன.;

Update:2025-11-09 09:43 IST

image courtesy:ICC

கொழும்பு,

பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரெரா ஹசரங்கா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம்: சரித் அசலன்கா (கேப்டன்), தசுன் ஷனகா, பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரெரா, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ராஜபக்சா, ஜனித் லியானகே, வனிந்து ஹசரங்கா, தீக்‌ஷனா, துஷான் ஹேமந்தா, துஷ்மந்த சமீரா, நுவான் துஷாரா, அசிதா பெர்னண்டோ, எஷான் மலிங்கா.

இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே உடன் 19-ம் தேதி மோத உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்