மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து விராட் கோலி ரசிகர் செய்த செயல்.. இணையத்தில் வைரல்

ரஞ்சி கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி இன்று களமிறங்கியுள்ளார்.;

Update:2025-01-30 16:47 IST

புதுடெல்லி,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின.

இதில் ஒரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

அவர் ரஞ்சி தொடரில் ஆடுவதால் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக 3 கேலரிகள் திறந்து விடப்பட்டது. அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் டெல்லி - ரெயில்வே இடையிலான ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பீல்டிங்கின்போது விராட் கோலி ரசிகர் ஒருவர்

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அத்துடன் அவர் விராட் கோலியை நோக்கி ஒடி அவரது காலில் விழுந்தார். உடனே அவரை விரட்டி சென்ற பாதுகாவலர்கள் தூக்கி நிறுத்தினர். விராட் கோலி, பாதுகாவலர்களிடம் அவரை ஒன்றும் செய்யாமல் பத்திரமாக அழைத்து செல்லுமாறு கூறினார்.

விராட் கோலி ரசிகரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்