வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ்

வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
image courtesy: @ICC
image courtesy: @ICC
Published on

ஆண்டிகுவா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெற உள்ளன.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) வெஸ்ட் இண்டீஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் அலிக் அத்தான்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து கீசி கார்டி, விக்கெட் கீப்பர் ஜோசுவா டி சில்வா, ஜஸ்டின் க்ரேவெஸ், கவெம் ஹோட்ஜ் ஆகியோர் உள்ளனர்.

தொடர்ந்து பந்துவீச்சாளர்களாக ஷமர் ஜோசப், அல்சாரி ஜோசப், மைக்கேல் லூயிஸ், கமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்; கிரேக் பிராத்வெய்ட் (கேப்டன்), அலிக் அத்தான்ஸ், கீசி கார்டி, ஜோசுவா டி சில்வா (விக்கெட் கீப்பர்), ஜஸ்டின் க்ரேவெஸ், கவெம் ஹோட்ஜ், ஷமர் ஜோசப், அல்சாரி ஜோசப், மைக்கேல் லூயிஸ், கமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com