காரைக்கால்
காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. அங்கேயே தங்கி இருந்து மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த முகமது அலி (வயது54) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவனை தனியாக அழைத்துச் சென்று, முகமது அலி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் போன் மூலம் மாணவன் தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது அலியை கைது செய்தனர்.