மூலக்குளம்
ரெட்டியார்பாளையம் மேரி உழவர்கரை மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). அவரது தாயார் பழனியம்மாள் (61). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இனறு மதியம் வீட்டின் கூரையில் உள்ள பைப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.