மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் நகைக்கடையில் 10½ பவுன் தங்க நகைகளை திருடிய ஊழியர் கைது

கோவில்பட்டி– எட்டயபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது கடையை பூட்டுவதற்கு முன்பாக நகைகளை ஆய்வு செய்தார். அப்போது 10 பவுன் மதிப்பிலான 2 தங்க சங்கிலிகள் மாயமானது தெரிய வந்தது.

உடனே அவர் தனது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். இதில் அந்த கடையின் ஊழியரான கோவில்பட்டி ஓதுவார் முடுக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (36) 2 தங்க சங்கிலிகளையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து, அவரிடம் இருந்த 2 தங்க சங்கிலிகளையும் பறிமுதல் செய்தார். பின்னர் மணிகண்டனை போலீசார் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.