மாவட்ட செய்திகள்

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதார்கான் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதார்கான் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் கொடிமரம் பகுதியை சேர்ந்த பிச்சையா மகன் சிவமுருகன்(எ) முருகன் (வயது 36), மேலப்பாளையம், பீடி காலனி, அலங்கார்நகர் 2வது தெருவை சேர்ந்த மைதீன்லெப்பை மகன் பெரோஸ்கான் யாசர்(29), மேலப்பாளையம், மேத்தம்மார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மீரான் உசேன் மகன் ஜமாலுதீன்(58) மற்றும் 3 இளஞ்சிறார்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.