நெல்லை,
நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று 12வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1ந் தேதி பென்சன் வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 16ந் தேதி முதல் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
12வது நாளான நேற்று இந்த தொழிலாளர்கள் கைகளில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு மாட்டை போராட்ட பந்தலுக்கு கொண்டு வந்தனர். கூட்டத்தை பார்த்து அந்த மாடு மிரண்டு ஓடியது. அந்த மாட்டை மீண்டும் பந்தலுக்கு பிடித்து வந்தனர். பின்னர் அந்த மாட்டின் முன்பு மனுவை கொடுப்பது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தங்கராஜ், பழனி, காளத்தினாதன், மனோகரன், முத்துகிருஷ்ணன், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.