மும்பை

பிவண்டியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 4 பேர் கைது: 3 பேருக்கு வலைவீச்சு

பிவண்டியில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை, 

பிவண்டியில் 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிறுமி கூட்டு பலாத்காரம்

தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வாலிபர் ஒருவரிடம் நட்பாக பழகி வந்தார். கடந்த 2-ந் தேதி வாலிபர், சிறுமியை பிவண்டி கார்பவ் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வாலிபர், சிறுமியை மிரட்டி கற்பழித்தார். சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என வாலிபர், சிறுமியை மிரட்டினா. இந்தநிலையில் அவர் மீண்டும் அதே பகுதிக்கு சிறுமியை மிரட்டி வரவழைத்தா. அங்கு சென்ற சிறுமியை வாலிபர் கார்பாவ் ரெயில் நிலையம் அருகில் உள்ள பாழடைந்த அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை வாலிபரின் நண்பர்கள் 6 பேர் மிரட்டி கற்பழித்தனர்.

4 பேர் கைது

இந்த சம்பவத்தால் மீள முடியாத அதிர்ச்சிக்கு சிறுமி சென்றார். பயத்தின் காரணமாக சில நாட்கள் அமைதியாக இருந்தார். இந்தநிலையில் சிறுமி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். பேலீசார் கூட்டு பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த 4 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு