திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏர்வாடி (பொறுப்பு) சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ராஜபுதூர் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நம்பிதலைவன்பட்டையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 32), நம்பிராஜா(23), இசக்கிராஜா(28) ஆகிய 3 பேரையும் போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சண்முகசுந்தரம், நம்பிராஜா, இசக்கிராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.