புதுச்சேரி
கோரிமேடு காமராஜர் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 64). நெய்வேலி அனல் மின்நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்சில் புதுச்சேரிக்கு திரும்பினார். இரவு நேரத்தில் ஜிப்மர் எதிரே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென கிருஷ்ண மூர்த்தியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியிடம் செல்போனை பறித்து சென்ற 2 சிறுவர்களை கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.