மும்பை

கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

நாலாச்சோப்ராவில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

வசாய், 

நாலாச்சோப்ராவில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.

குட்டையில் மூழ்கினர்

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா கிழக்கு பெல்கார் பகுதியை சேர்ந்த சிறுவன் அம்ஜா அன்சாரி(வயது7). இவன் நேற்று மாலை ஜூனைத் மனிகார்(8) உள்பட 2 சிறுவர்களுடன் வெளியே விளையாட சென்றான். சிறிது தொலைவில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அங்கு குட்டையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனை கண்ட சிறுவர்கள் உற்சாகம் அடைந்து வேடிக்கை பார்க்க சென்றனர்.

அப்போது அம்ஜா அன்சாரி, ஜூனைத் மனிகார் ஆகிய 2 சிறுவர்கள் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்தனர். 20 அடி ஆழமான இடத்தில் விழுந்த 2 பேரும் மூழ்கினர்.

2 சிறுவர்கள் பலி

இதனை கண்ட உடன் இருந்த மற்றொரு சிறுவன் வீட்டுக்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் தெரிவித்தான். இதன்படி பெற்றோர் உள்பட அக்கம்பக்கத்தினர் கல்குவாரி குட்டையில் இறங்கி சிறுவர்களை தேடினர். வெகுநேரம் தேடலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர் உயிரிழந்தாக தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்