மும்பை

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

புனேயில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

புனே, 

புனே தயாரி பகுதியை சேர்ந்த சிறுவன் சூரஜ் சட்புடே(வயது14), புஷ்கர்(13). இவர்கள் காலை 9.30 மணி அளவில் அங்குள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர். குளத்தில் ஆழமான இடத்திற்கு சென்ற 2 பேரும் மேற்கொண்டு நீந்த முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட நண்பர்கள் சம்பவம் குறிதது தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் தேடலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கிய 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை