மும்பை

ஒரு வாலிபருக்காக 2 சிறுமிகள் குடுமிபிடி சண்டை - பஸ் நிலையத்தில் பரபரப்பு

ஒரு வாலிபருக்காக பஸ் நிலையத்தில் 2 சிறுமிகள் சண்டையிட்டுகொண்ட சம்பவம் அவுரங்காபாத்தில் உள்ள பைதானில் நடைபெற்று உள்ளது.

தினத்தந்தி

காதல் சண்டை

அவுரங்காபத்தில் உள்ள பைதான் நகரில் எப்போதும் மக்கள் நெரிசலாக காணப்படும் பஸ் நிலையத்திற்கு நேற்று 17 வயது சிறுமி ஒருவர் தனது வாலிபருடன் வந்தார். இருவரும் பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மற்றொரு 17 வயது சிறுமி இவர்களை கண்டு கோபம் அடைந்தார்.

திடீரென அவர் தனது காதலனை அபகரித்துக்கொண்டதாக கூறி அந்த சிறுமியுடன் தகராறில் ஈடுபட்டார். இதற்கு அந்த சிறுமியும் காட்டமாக பதில் அளித்தார். இருவர் இடையே சண்டை மூண்டது. பொது இடம் என்றும் பாராமல் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கெண்டனர்.

தப்பி ஓடிய காதலன்

ஒரு வாலிபருக்காக பொது இடத்தில் சிறுமிகளின் குடுமிபிடி சண்டையை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இந்த மோதலுக்கு காரணமான காதல் மன்னனோ அவர்களின் கவனம் சிதறிய நேரம் பார்த்து, விட்டால்போதும் என அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் சண்டையிட்டுக்கொண்டு இருந்த சிறுமிகள் இருவரையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை எச்சரித்த போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு