திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆவரைகுளம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த சமரேஷ்மண்டல் (வயது 31) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமரேஷ்மண்டலை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.