மும்பை,
மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி. சிறு வயதில் தாயை இழந்ததால் அத்தை பராமரிப்பில் வளர்ந்து வந்தாள். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அறிந்த அத்தை அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றாள். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி நடத்திய விசாரணையில், டோங்கிரியை சேர்ந்த 34 மற்றும் 36 வயதுடைய 2 வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்து உள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. மரபணு பரிசோதனையில் 2 பேரின் மீதான ஆதாரங்கள் நிரூபணமானது. இதனை தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்கள் 2 பேருக்கும் தலா 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.