புதுச்சேரி

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

தவளக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் போலீசார் தனியார் டீ தூள் கம்பெனி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சத்யராஜ் (வயது 23), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள், ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்