மும்பை

வாடா தாலுகாவில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 2 பேர் பலி

வாடா தாலுகாவில் விநாயகர் சிலை கரைக்கும் போது ஏரியில் மூழ்கி 2 பேர் பலியானார்கள்

வசாய், 

பால்கர் மாவட்டம் வாடா தாலுகா கோன்சாய் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மாலை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி அங்குள்ள ஏரியில் நடந்தது. இந்த நிகழ்வில் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த ஜகத் மவுரியா (வயது38), நந்தலால் பிரஜாபாதி (25) ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் போலீசாரின் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் கழித்து 2 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல கோர்கே ஏரியில் பிரகாஷ் தாக்ரே (35) என்பவர் கணபதி சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது தண்ணீரில் மூழ்கினர். இவரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...