மும்பை

லால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலி

லால்பாக் மேம்பாலத்தில் வாகனம் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மும்பை, 

மும்பை கோவண்டி கவுதம் நகரை சேர்ந்தவர் சையத். இவர் தனது நண்பர் அகமது சேக் என்பவருடன் டோங்கிரிக்கு மோட்டார் சைக்கிளில் கடந்த 29-ந்தேதி இரவு புறப்பட்டு சென்றார். பரேல் லால்பாக் மேம்பாலத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற மேட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான 2 பேரும் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருந்து வந்தது தெரியவந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து