மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 3 பேர் கைது

மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன்(வயது 56), செல்வகுமார்(49), சங்கர்(35) ஆகியோர் டயர் மாட்டு வண்டிகளில் காக்காபாளையம் ஓடையில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு பருக்கல், நடுவலூர் வழியாக உடையார்பாளையத்தை நோக்கி வந்தனர். சோழங்குறிச்சி அருகே வந்தபோது மாட்டு வண்டிகளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.