செந்துறை:
தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மது விற்கப்படுவதாக இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில், இரும்புலிக்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன், சிறுகடம்பூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்த ரமேஷ்குமார், நாகல்குழி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த உதயசூரியன் ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி, அவர்களை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.