இதனால் கரைப்பகுதியில் 3 அடி உயரத்திற்கு கடற்கரையில் மணல் திட்டு உருவாகி உள்ளது.
இது குறித்து மாமல்லபுரம் மீனவர்கள் கூறியதாவது:-
கடலில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கடல் நீரோட்டம் வடக்கு, தெற்கு என திசை மாறும்போது கடல் அரிப்பு ஏற்படும். ஒரு சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், முன்னோக்கி வருவதும் உண்டு. நீரோட்டம் மாறும் நேரத்தில் கரையில் மணல் திட்டு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.