புதுச்சேரி

கஞ்சா வழக்கில் மெக்கானிக்குகள் 3 பேர் சிக்கினர்

தவளக்குப்பம் அருகே கஞ்சா விற்ற மெக்கானிக்குகள் 3 பேரை போலீசாரம் கைது செய்தனர்.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கொருக்குமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டியராஜன் (வயது 26), திருப்பாதிரிபுலியூர் முஷரப் (22), வண்டிபாளையம் சுகுமார் (20) என்பதும், 3 பேரும் முருங்கப்பாக்கத்தில் உள்ள மோட்டார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் எடையுள்ள 10 கஞ்சா பொட்டலங்கள், 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை