சினிமா துளிகள்

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் 3 ஆஸ்கார் பிரபலங்கள்

ஆஸ்கார் விருது வென்ற 3 பேர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் பணியாற்றுகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் பார்த்திபன், தனது ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் நீங்காத இடத்தைப் பிடித்தார். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அதனை தொடர்ந்து பார்த்திபன், இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அதே சமயம் இந்த திரைப்படம் உலகிலேயே முதல் முறையாக Non-linear முறையில் சிங்கில்-ஷாட் திரைப்படமாக தயாராகி வருவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்கார் விருது வென்ற 3 பேர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஷூவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் கட்டாலங்கோ லியான் மற்றும் ஒலிக்கோர்ப்பு மேற்பார்வையாளர் கிரெய்க் மான் ஆகிய 3 பேர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது