தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோவில் (வயது 57) என்பவர் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருந்த வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கூடலிங்கம்(29) மற்றும் சுடலைமுத்து(19) ஆகியோர் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.
மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நாசரேத் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களின் வேண்டுகோளின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் மேற்சொன்ன 3 பேரையும் நேற்று (29.1.2026) போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.