மும்பை

மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது- 2 பேருக்கு வலைவீச்சு

ஜல்னா மாவட்டம் பட்னாபூர் தாலுகா தாபாதி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது

தினத்தந்தி

ஜல்னா,

ஜல்னா மாவட்டம் பட்னாபூர் தாலுகா தாபாதி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கடந்த மாதம் 28-ந் தேதி 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கடந்த 7-ந்தேதி பெற்றோர் விசாரித்த போது கூட்டு பலாத்காரம் விவகாரம் தெரியவந்தது. இது பற்றி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அப்பெண்ணை கற்பழித்த 3 பேர் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரை பிடித்து கைது செய்தனர்.

அவர்களை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கில் தொடர்புடைய 2 பேரை பிடிக்க போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா