மரக்காணம்
மரக்காணம் அருகே நாவாக்கம் பகுதியில் இருந்து மினி லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் மரக்காணம் போலீசார் நாவாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 50 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித்திடம் (வயது 21) விசாரித்தபோது நாவாக்கம் மற்றும் சுற்றுப்பகுதி வீடுகளில் இருந்து ரேஷன் அரிசிகளை வாங்கி திண்டிவனத்துக்கு எடுத்துச்செல்வதாக கூறினார். இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட அஜித்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.