குளித்தலை
குளித்தலை பெரியபாலம், உள்மருதூர், ராஜேந்திரம் ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் மது விற்ற மாணிக்கம் (வயது 53), தங்கராசு (78), பரமேஸ்வரி (61) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற தளவாபாளையம் பஜனை மடத்தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவரை வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் கைது செய்தார்.