தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சத்து 80 ஆயிரத்து 380 கோவிஷீல்டு தடுப்பூசிகள் 41 பெட்டிகளில் சென்னை வந்தன. பின்னர் அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.