புதுச்சேரி

பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது

நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியில் பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் மெயின்ரோடு அருகே, பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் 2 பேர் ஆபசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அப்பகுதிமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், நெடுங்காடு போலீசார் அங்கு வந்து 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் வேலங்குடி பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது30), அவரது நண்பர் மயிலாடுதுறை குத்தாலம் மாதிரிமங்களத்தை சேர்ந்த வசந்த் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோட்டுச்சேரி பூவம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக பொதுஇடத்தில் ரகளையில் ஈடுபட்ட மயிலாடுதுறை பொறையார் மரகதம் காலனியை சேர்ந்த ராஜா (43), கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து