முன்னோட்டம்

ஒரு படத்தில் நான்கு கதைகள்

தினத்தந்தி

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் `யோக்கியன்'. இதில் தேவி கிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சாய்பிரபா மீனா டைரக்டு செய்துள்ளார். ஜெயசதீசன் கதை எழுதி உள்ளார். வி.மாதேஷ் தயாரித்துள்ளார்.

படம் குறித்து ஜெய் ஆகாஷ் கூறும்போது, ``அயோக்கியனை காட்டினால்தான் யோக்கியனை காட்டமுடியும். அதுதான் இந்த படத்தின் கதை. படத்தில் மொத்தம் 4 கதைகள் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி வரவில்லை. 30 இரவுகள் நான் தூங்காமல் தயார் செய்ததுதான் இந்த யோக்கியன் ஸ்கிரிப்ட். சாய் பிரபாமீனா இயக்குனராக ஜெயிக்க இந்தக் கதையை கொடுத்தேன்.

தற்போது சிறிய படங்களுக்கு தியேட்டர் தர மறுக்கிறார்கள். அதனால் படத்தை ஒ.டி.டி. யில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால் இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று இயக்குனர் கேட்டார். அதனால் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது' என்றார்.

ஒளிப்பதிவு: சார்க்கி அண்ட் பால்பாண்டி,

இசை: சுமன் ஜூப்டி, யுகே முரளி, 

தயாரிப்பு: வி.மாதேஷ்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது