கறம்பக்குடி
கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி ராட்டினாகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பணம் மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் மற்றும் போலீசார் கடைவீதி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற திருமேனி (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.31 ஆயிரத்து 780 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.