புதுச்சேரி

பெண் உள்பட 5 பேர் கைது

கறவை மாட்டை திருடிய பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கோரிமேடு அருகே மீனாட்சி பேட் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 63). பால் வியாபாரி. இவர் வீட்டில் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது ஒரு கறவை மாட்டை காணவில்லை.

இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் திருநாவுக்கரசு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கறவை மாட்டை திருடியது முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அஞ்சலாட்சம் (44) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கறவை மாட்டையும் மீட்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை