மாவட்ட செய்திகள்

நெல்லையில் 587 பேருக்கு காவலர்களுக்கான உடல் திறனாய்வு தேர்வு

2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு திருநெல்வேலியில் நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும், 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வுகளுக்கு, திருநெல்வேலி மாவட்ட தேர்வு மையத்திற்காக சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் மேற்பார்வையில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் (தலைமையிடம்) தலைமையில் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வுகள் 27.1.2026 முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று (29.1.2026) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 590 விண்ணப்பதாரர்களில் 587 விண்ணப்பதாரர்கள் உடல் திறனாய்வு தேர்வுகளான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் மற்றும் பந்து எறிதல் போன்றவற்றில் கலந்து கொண்டனர்.