மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறிய 781 பேருக்கு அபராதம்

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 781 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:

கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊரடங்கை மீறுவோர் மற்றும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறி முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்த 169 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லை மாநகரில் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்த 230 பேருக்கும், மேலும் வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 382 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.