மூலக்குளம்
மூலக்குளம்-வில்லியனூர் மெயின் ரோட்டில் உழவர்கரை அருகே இன்று மதியம் குப்பை ஏற்றி வந்த வாகனம் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு வாகனம் மூலம் அந்த வாகனத்தை கட்டி இழுத்து சென்றனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.